வாடகை கொடுக்க முடியாத சூழல்: 48 தமிழ்க் குடும்பங்களை வீட்டை விட்டு துரத்திய உரிமையாளர்!

 

வாடகை கொடுக்க முடியாத சூழல்: 48 தமிழ்க் குடும்பங்களை வீட்டை விட்டு துரத்திய உரிமையாளர்!

353 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் இந்தியாவில் கொரோனா அறிகுறி முதன் முதலில் கண்டறியப்பட்ட கேரளாவில் 178 பேருக்கு கொரோனா உறுதிசெய்யபட்டுள்ளது. இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 10, 815 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 353 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் இந்தியாவில் கொரோனா அறிகுறி முதன் முதலில் கண்டறியப்பட்ட கேரளாவில் 178 பேருக்கு கொரோனா உறுதிசெய்யபட்டுள்ளது. இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். 

tt

இதனால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்களுக்கும் தினக்கூலிகளும் கையில் பணம் இல்லாமல் செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். 

 

இந்நிலையில் கேரளாவில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத 48 தமிழ்க் குடும்பங்களை வீட்டின் உரிமையாளர் வீட்டை விட்டு தூரத்தியுள்ளார். கொள்வாயலல் கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில்  வசித்து வந்த இந்த தமிழ் குடும்பங்கள் மரம் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். ஊரடங்கால் தற்போது வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.  இத்தகைய சூழலில் தான் அவர்கள் வீட்டை விட்டு துரத்தி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.