வாடகை கொடுக்காத கூலி தொழிலாளி : குடும்பத்துடன் துரத்தப்பட்டதால் சாலையில் தஞ்சம்!

 

வாடகை கொடுக்காத கூலி தொழிலாளி : குடும்பத்துடன் துரத்தப்பட்டதால் சாலையில் தஞ்சம்!

கரூர் அருகே உள்ள மூக்கனாங்குறிச்சி கிராமத்தில் நாகராஜன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். 

கரூர் அருகே உள்ள மூக்கனாங்குறிச்சி கிராமத்தில் நாகராஜன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். 

கட்டட தொழிலாளியான இவர்  கொரோனா காரணமாக வேலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.  இதனால் கையில் பணம்  இல்லாததால் நாகராஜனால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை.  இதனால் வீட்டு உரிமையாளர் அவர்களை வீட்டை காலி செய்ய வற்புறுத்தியுள்ளார்.  

tt

உரிமையாளரின் தொடர் வற்புறுத்தல் காரணமாக நாகராஜன் தனது மனைவி இரண்டு குழந்தைகள் மற்றும் வீட்டு பொருட்களுடன் வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் வெள்ளியணை செல்லும் சாலை ஓரத்தில் குடும்பத்துடன்  தங்கியுள்ளார். 

tt

இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளியணை காவல் நிலைய போலீசார் சாலையோரத்தில் தங்கியிருந்த நாகராஜனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய பொருட்களையும்,  அவரின் குடும்பத்தையும் அவரது குடும்பத்தினரையும் சிறிய லாரியில் ஏற்றுக்கொண்டு வீட்டு உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்க வைப்பதற்காக அழைத்துச் சென்றனர். பின்னர் வீட்டின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி 144 தடை உத்தரவு முடியும் வரை வீட்டை காலிச் செய்ய சொல்ல கூடாது என எச்சரித்து விட்டு சென்றனர்.