“வாடகைக்கு ரயில் நிலையங்கள்”… சத்திரமாகும் ரயில்வே ஸ்டேஷன்!  

 

“வாடகைக்கு ரயில் நிலையங்கள்”… சத்திரமாகும் ரயில்வே ஸ்டேஷன்!  

இந்தியாவிலேயே முதல்முறையாக கேரள மாநிலம் கொச்சி ஹார்பர் டெர்மினல்ஸ் ரயில் நிலையம் திருமண போட்டோ ஷூட் மற்றும் பிறந்த நாள் விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படவுள்ளது.

Railway station

நஷ்டத்தில் இயங்கிவரும் ரயில்வே துறையை மேம்படுத்தவும், ரயில் நிலையங்களை பராமரிக்க தேவையான நிதியை பெறவுமே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி கொச்சி ஹார்பர் டெர்மினல்ஸ் ரயில் நிலையத்தில் முதல்முறையாக இத்திட்டம் செயல்படுத்தியுள்ளது. முதல் நிகழ்ச்சியாக இந்திய ஃபைவ் ஸ்டார், செவன் ஸ்டார் ஹோட்டல்களின் மேலாளர்கள் மாநாடு அங்கு நடைபெற்றுள்ளது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு 50 ஆயிரம் ரூபாய் வாடகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.