வாஜ்பாய் பிறந்த தினம்; ரூ 100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்

 

வாஜ்பாய் பிறந்த தினம்; ரூ 100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்ததினம் நாளை கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூ 100 நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 94-வது பிறந்ததினம் நாளை கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூ 100 நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 93. இதனையடுத்து அவரை கவுரவிக்கும் வகையில் வாஜ்பாய் உருவம் பொறித்த ரூ 100 நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது, இந்நிலையில், வாஜ்பாயின் 94-வது பிறந்ததினம் நாளை கொண்டாடப்பட இருப்பதையொட்டி அவரது உருவம் பொறித்த ரூ 100 நாணயத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

vajpaayaa

அதன்பிறகு விழாவில் அவர் பேசுகையில், வாஜ்பாய் நம்மிடம் இல்லை என்பதை நமது மனம் ஏற்க மறுக்கிறது. நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர். சிறந்த நிர்வாகியான அவர் மேம்பட்ட பேச்சாளராக திகழ்ந்தார். நமது நாடு தந்த சிறந்த சொற்பொழிவாளர்களில் வாஜ்பாயும் ஒருவர் என்றார்.