வாங்குன பூவுக்கு காசுக்கூட கொடுக்கல…. ஆளுநர் மாளிகை மீது பூ வியாபாரி வழக்கு!

 

வாங்குன பூவுக்கு காசுக்கூட கொடுக்கல…. ஆளுநர் மாளிகை மீது பூ வியாபாரி வழக்கு!

டிசம்பர் 2014 முதல் ஜூன் 2015 வரை ரூ. 1.82 லட்சத்திற்கு பூக்கள் வாங்கியதற்கான தொகையை இதுவரை ஆளுநர் மாளிகை செலுத்தவில்லை என பம்மலைசேர்ந்த பூ வியாபாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 

சென்னை பம்மலை சேர்ந்த பூ வியாபாரியான ஸ்டெர்லிங் ஃப்ளவர்ஸின் உரிமையாளரான பஷீர் அகமது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்கு பூக்கள், கலப்பின பூக்கள், அலங்கார பொருட்கள் என சப்ளை செய்து வருகிறேன். இந்நிலையில் தமிழக ஆளுநராக கே.ரோசய்யா இருந்தபோது, அதாவது 2014 டிசம்பர் மாதம் முதல் 2015 ஜூன் வரை ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்ட பூக்களுக்கு இன்னும் பணம் தரவில்லை. இதற்கான தொகை 8 ரசீதுக்கும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய். பணம் குறித்து பலமுறை ஆளுநர் மாளிகைக்கு சென்று தொந்தரவு செய்ததால் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்தனர். மீதமுள்ள 1 லட்சத்து 82 ஆயிரத்தை இன்னும் வழங்கவில்லை. எனவே இந்த தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகை

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதி, இதுகுறித்து ஆளுநரின் துணை செயலாளர், ஆளுனரின் கணக்காயரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்