வாங்கம்மா வாங்க, எந்த புதுதுணி எடுத்தாலும் ஒரு ரூபாய்! ரஷ்யாவில் ருசிகரம்!

 

வாங்கம்மா வாங்க, எந்த புதுதுணி எடுத்தாலும் ஒரு ரூபாய்! ரஷ்யாவில் ருசிகரம்!

சமீபத்தில் ரஷ்யாவுக்கு சென்ற மோடியுடன் தமிழக தரப்பு அதிகாரிகள் யாரும் சென்றிருக்கவேண்டும். சென்றவர் ’ஒரு ரூவாய்க்கு ஒண்ணுன்னு எங்க ஊர்ல என்ன சொன்னாலும் வாங்குவாங்க’ என அவர்களுக்கு யோசனை அளித்திருக்கவேண்டும். உடனடியாக அதை அமலுக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

ரஷ்யா, விளாடிகவ்கஸ் நகரில் ஸ்டோலிஸ்டா என்ற துணிக்கடை செயல்பட்டு வருகிறது. சற்றே டல்லடித்த வியாபாரத்தை எப்படி தூக்கி நிறுத்தலாம் என நிர்வாகிகளுக்குள் பலத்த யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் ரஷ்யாவுக்கு சென்ற மோடியுடன் தமிழக தரப்பு அதிகாரிகள் யாரும் சென்றிருக்கவேண்டும். சென்றவர் ’ஒரு ரூவாய்க்கு ஒண்ணுன்னு எங்க ஊர்ல என்ன சொன்னாலும் வாங்குவாங்க’ என அவர்களுக்கு யோசனை அளித்திருக்கவேண்டும். உடனடியாக அதை அமலுக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

Shoppers rush for lifetime offer

இந்திய ரூபாய்க்கும் ரஷ்ய ரூபிளுக்கும் மதிப்பில் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை. ஒரு ரூபாயும் ஒன்பது பைசாவும் கொடுத்தால், ஒரு ரஷ்ய ரூபிள் கிடைக்கும். எனவே, ஒரு ரூபாய்க்கு ஒரு துணி என விளம்பரம் தயார் செய்யப்பட்டது. நமம் லெஜண்ட சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்மாதிரி, அக்கடை ஓனரே விளம்பரத்தில் இருந்திருக்கவேண்டும், காரணம், கடை திறந்த ஐந்தாவது நிமிடத்திலேயே மொத்த துணியும் விற்பனை. கிடைத்த துணிகளை எல்லாம் பெண்கள் கைகளில் அள்ள, அதே துணியை இன்னொரு பெண்ணும் அள்ள,  சிறு தள்ளுமுள்ளுவுக்குப் பிறகு விற்பனை சிறப்பாக நிறைவுற்றது.  விரைவில் இதுபோல் அடுத்த ரவுண்டு தள்ளுபடி விற்பனையும் நடக்க இருக்கிறதாம்!