வாக்குச்சாவடிக்கு 105 வயது தாயை தோளில் சுமந்து வந்த மகன்; நெகிழ்ச்சி சம்பவம்!

 

வாக்குச்சாவடிக்கு 105 வயது தாயை தோளில் சுமந்து வந்த மகன்; நெகிழ்ச்சி சம்பவம்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் வருகிற 23-ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே, நான்கு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது

ஜார்கண்ட்: மக்களவை தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் வருகிற 23-ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே, நான்கு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உத்தரபிரதேசம் (14), ராஜஸ்தான் (12), மத்தியப்பிரதேசம் (7) மேற்குவங்கம் (7), பிகார் (5), ஜார்கண்ட் (4), ஜம்மு-காஷ்மீர் (2) உள்ளிட்ட  7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

vote

இதற்காக அந்தந்த மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் காலை முதலே வரிசையில் நின்று பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர், போலீசார் உள்பட ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

vote

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வரிசையில் நின்று வாக்களித்க்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த வாக்காளர் ஒருவர், தனது 105 வயதான தாயை தோளில் சுமந்து கொண்டு வந்து வாக்களித்தது பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.