வாக்குக்கொடுத்தப்படி கலைஞானத்துக்கு ரூ.1 கோடியில் வீடு வாங்கிதந்த ரஜினி! 

 

வாக்குக்கொடுத்தப்படி கலைஞானத்துக்கு ரூ.1 கோடியில் வீடு வாங்கிதந்த ரஜினி! 

தயாரிப்பாளர் கலைஞானம் தான் ரஜினிகாந்திற்கு முதன்முதலில் வாய்ப்புக்கொடுத்தவர். அந்த நன்றியை மறக்காத ரஜினிகாந்த் இன்று வறுமையில் வாடும் கலைஞானத்துக்கு உதவி செய்துள்ளார். 

தயாரிப்பாளர் கலைஞானம் தான் ரஜினிகாந்திற்கு முதன்முதலில் வாய்ப்புக்கொடுத்தவர். அந்த நன்றியை மறக்காத ரஜினிகாந்த் இன்று வறுமையில் வாடும் கலைஞானத்துக்கு உதவி செய்துள்ளார். 

Rajinikanth

திரைப்பட தயாரிப்பாளர், கதாசிரியர் கலைஞானத்துக்கு நடந்த பாராட்டு விழாவில், அவர் இன்னமும் வாடகை வீட்டில் வசிப்பதாக நடிகர் சிவக்குமார் கூறினார். மேலும் அவருக்கு அரசு வீடு ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்த விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், கலைஞானத்துக்கு தான் வீடு வாங்கி தருவதாக ஒப்புக்கொண்டார். பாரதிராஜா ஒரு அழகான வீட்டை பார்த்து பிடித்து தர, அதன்படி தற்போது ரூ. 1 கோடியில் வீடு வாங்கி கலைஞானத்து பரிசாக வழங்கியுள்ளார் ரஜினிகாந்த்.