வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாய்ப்பு!

 

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாய்ப்பு!

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு 09.09.2019, 23.09.2019, 07.10.2019 மற்றும் 14.10.2019 ஆகிய 4 நாட்களில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமை நாடலாம்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் 31.08.2019 சனிக்கிழமை அன்று வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு 09.09.2019, 23.09.2019, 07.10.2019 மற்றும் 14.10.2019 ஆகிய 4 நாட்களில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமை நாடலாம்.

Verify your electoral list

31.12.2000 அல்லது அதற்குமுன் பிறந்து 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்காளர் சேர்க்கைக்கான படிவம்(6)-ஐ பூர்த்தி செய்து தரவேண்டும். பெயர் நீக்கத்திற்கு படிவம் 7ம், வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம் 8ம், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8Aம் பயன்படுத்தவும். ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இன்னமும் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளவேண்டுமாய் கேட்டு கொள்ளப்படுகிறது.