வாக்காளர் அடையாள அட்டையில் நாய் போட்டோ…. அதிர்ந்து போன மேற்கு வங்க மனிதர்

 

வாக்காளர் அடையாள அட்டையில் நாய் போட்டோ…. அதிர்ந்து போன மேற்கு வங்க மனிதர்

திருத்தம் செய்து வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் தனது போட்டாவுக்கு பதில் நாய் படம் இருந்தது கண்டு மேற்கு வங்க மனிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் உள்ள ராம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் சுனில் கர்மாக்கர். இவர் அண்மையில் தனது வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் செய்யக்கோரி விண்ணப்பம் செய்து இருந்தார். திருத்தங்கள் செய்யப்பட்டு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பார்த்த சுனில் கடும் அதிர்ச்சி அடைந்தார். அந்த அடையாள அட்டையில் அவரது படத்துக்கு பதிலாக நாய் படம் இருந்தது.

நாய் படத்துடன் வழங்கப்பட்ட வாக்காளர் அட்டை

இது குறித்து சுனில் கர்மாக்கர் கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் கோரி விண்ணப்பம் செய்து இருந்தேன். நேற்று துலால் ஸ்மிரிதி பள்ளிக்கு என்னை அழைத்து திருத்தப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை என்னிடம் கொடுத்தனர். அதில் எனது போட்டாவுக்கு பதில் நாய் படம் இருந்தது. அந்த வாக்காளர் அட்டையை அதிகாரி கையெழுத்திட்டு அதன் பிறகுதான் என்னிடம் கொடுத்தார்.அந்த அதிகாரி அந்த படத்தை பார்க்கவில்லை.

ஆன்லைனில் விண்ணப்பம்

இது என்னுடைய கவுரவத்துடன் விளையாடுவது. ஒன்றிய மேம்பாட்டு அதிகாரியை சந்தித்து இது போன்ற மற்றொரு நடக்க கூடாது என கோரிக்கை விடுக்க உள்ளேன் என தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய மேம்பாட்டு அதிகாரி ராஜர்ஷி சக்ரபோர்ட்டி கூறுகையில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஒருவரால் இந்த தவறு (நாய் படம்) நடந்து இருக்கலாம். அந்த படம் ஏற்கனவே சரிசெய்யப்பட்டு விட்டது. சரியான படத்துடன் இறுதியான வாக்காளர் அட்டையை அவர் பெறுவார் என தெரிவித்தார்.