வாக்காளர்கள் உயிருக்கு ஆபத்து; தேர்தல் நடத்த வக்கற்ற தேர்தல் ஆணையம் – வீடியோ

 

வாக்காளர்கள் உயிருக்கு ஆபத்து; தேர்தல் நடத்த வக்கற்ற தேர்தல் ஆணையம் – வீடியோ

வாக்களிக்க செல்லும் மக்களுக்கு முறையான பேருந்து வசதி ஏற்படுத்தி தராமல் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையமும், எடப்பாடி பழனிசாமி அரசாங்கமும். ஆயிரக்கணக்கானோர் வாக்களிக்க செல்லாமல் பணிபுரியும் ஊரிலேயே தங்கும் கொடுமை ஏற்பட்டுள்ளது.

சென்னை: வாக்களிக்க செல்லும் மக்களுக்கு முறையான பேருந்து வசதி ஏற்படுத்தி தராமல் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையமும், எடப்பாடி பழனிசாமி அரசாங்கமும். ஆயிரக்கணக்கானோர் வாக்களிக்க செல்லாமல் பணிபுரியும் ஊரிலேயே தங்கும் கொடுமை ஏற்பட்டுள்ளது.

பஸ்

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற இடைத்தேர்தலும் ஒருங்கே நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு பொது வெளியில் வைக்கப்படுகிறது. எதிர்கட்சியினர் இல்லங்களில் தொடர் வருமான வரித்துறை சோதனை, ஆளுங்கட்சி பணம் வழங்குவதை கண்டுகொள்ளாமல் இருப்பது, வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது என தேர்தல் ஆணையம் எதற்கு இருக்கிறது என மக்கள் அதிருப்தி அடையும் அளவு மட்டமாக நடந்துகொண்டிருக்கிறது.

பேருந்து

இது ஒருபுறமிருக்க, வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு முறையான பேருந்து வசதியை ஏற்படுத்தி தவறியுள்ளது தேர்தல் ஆணையமும், எடப்பாடி அரசாங்கமும். நேற்றிரவு சென்னை கோயம்பேட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை, பேருந்து வராததால் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. பேருந்து கிடைத்து ஊருக்கு சென்றவர்களும் பாதுகாப்பாக செல்லவில்லை, பேருந்தின் படிகளில் தொங்கிக்கொண்டும், மேல்தளத்தில் ஏறியும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

சோதனை என்கிற பெயரில் பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியிருக்கிறது தேர்தல் ஆணையம், சென்னையை விட்டு வெளியேற கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கு மேல் ஆகும் நிலை. வாக்களிக்க விரும்பும் 30,000 -க்கும் அதிகமான வாக்காளர்கள் சென்னையை விட்டு வெளியேறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதையும் வாசிங்க: மக்களவை தேர்தல் 2019 Live Updates; தமிழகத்தில் 13.48 சதவீத வாக்குப்பதிவு-சத்யபிரதா சாஹூ தகவல்!