வாகனம் இல்லாமல் 800 கிமீ தூரம் கர்ப்பிணி மனைவி, மகளை பத்திரமாக அழைத்து சென்ற கணவன் !!

 

வாகனம் இல்லாமல் 800 கிமீ தூரம் கர்ப்பிணி மனைவி, மகளை பத்திரமாக அழைத்து சென்ற கணவன் !!

ஹைதராபாத்தில் இருந்து மத்திய பிரதேசத்தின் பலகாட் மாவட்டம் வரை 800 கி.மீ. தூரம் சென்றுள்ளார். வழியெங்கும் அவர்களுக்கு சில நல்லெண்ணம் கொண்டவர்கள் பிஸ்கட் மற்றும் உணவு கொடுத்து உதவியுள்ளனர். 

புலம் பெயர்ந்து தெலுங்கானாவில் வாழ்ந்து வந்த தொழிலாளி ஒருவர் ஊரடங்கு காரணமாக தன்னுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டார். கையில் காசு இல்லாத நிலையில் கைகளால் தயாரித்த வண்டி ஒன்றில் தனது கர்ப்பிணி மனைவி, மகளை அமர வைத்து தொடர்ந்து 17 நாட்கள் 800 கிமீ தூரம் பத்திரமாக அந்த வண்டியுடன் அழைத்து சென்றுள்ளார்.

ஹைதராபாத்தில் இருந்து மத்திய பிரதேசத்தின் பலகாட் மாவட்டம் வரை 800 கி.மீ. தூரம் சென்றுள்ளார். வழியெங்கும் அவர்களுக்கு சில நல்லெண்ணம் கொண்டவர்கள் பிஸ்கட் மற்றும் உணவு கொடுத்து உதவியுள்ளனர். 
17 நாட்கள் கடந்து மகாராஷ்டிரா எல்லையைத் தாண்டி பாலகாட்டில் உள்ள ராஜேகான் பகுதியில் சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் விசாரித்த போலீசார் அவர்கள் கதையை கேட்டு வேதனை அடைந்தனர். உடனடியாக அவர்கள் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல ஒரு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்தனர். மேலும் குடும்பத்திற்கு உணவு மற்றும் தண்ணீரையும், குழந்தைக்கு பாதணிகளையும் கொடுத்து உதவி செய்துள்ளனர். 
இப்படி பொறுப்புடன் மனைவி, மகளை அழைத்து சென்றவர் பெயர் ராமு கோர்மரே அவரது மனைவி பெயர் தன்வந்தா மற்றும் மகள் அனுரகினி. இவர் ஒரு வண்டியில் அவர்களை அமர வைத்து இழுத்துசெல்லும் வீடியோக்கள் வைரலாகி வந்தன. இதுபோன்று புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவதிப்படும் வீடியோக்களை பார்த்து இந்தியரகள் அனைவரும் வேதனைப்பட்டனர்.  மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பாலகாட்டில் உள்ள குடெமோ கிராமத்தில் வசிக்கும் ராமு, கடந்த வாரத்தில் மாவட்டத்திற்கு திரும்பிய 86,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் ஒருவர்.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவர் ஊரடங்கு காரணமாக வேலையை இழந்தார். மனைவி மகளுக்கு உணவு வழங்க முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் சொந்த ஊருக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்தார். ஆனாலும் அவருடைய மனைவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார், இந்த வெயில் காலத்தில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து எப்படி செல்ல முடியும் என யோசித்தார். 
கையில் பணமும் இல்லை. எனவே ஒரு கட்டுமான தளத்தில் கிடந்த குழாய்கள், பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கயிறுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு வாகனம் தயாரித்தார். அதில் கர்ப்பிணி மனைவி, மகளை அமரவைத்து தன்னுடைய பயணத்தை தொடர்ந்துள்ளார்.