வழக்கு விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்யலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

 

வழக்கு விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்யலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என இந்திரா தேசிங் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்ததை அடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி நீதிமன்றங்களில் அனைத்து வழக்கு விசாரணைகளையும் நேரலையாக ஒளிபரப்பு செய்யாமல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணைகளை மட்டும் நேரலையாக ஒளிபரப்பு செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.