வழக்கம் போல் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி: நாடகமாடுகிறதா சென்னை அணி?!

 

வழக்கம் போல் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி: நாடகமாடுகிறதா சென்னை அணி?!

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி 7 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

கொல்கத்தா: ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி 7 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 

kkr

ஐபிஎல் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில், சென்னை  – கொல்கத்தா அணிகள் மோதின. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில்,  டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.  கொல்கத்தா வீரர்கள் சொற்ப ரன்களில்  அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கிறிஸ் லின் அதிரடியாக ஆடி 82 ரன்களை குவித்தார்.  இதையடுத்து கொல்கத்தா அணி  20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. 

csk

இதை தொடர்ந்து  162 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில்,  தொடக்கவீரர் வாட்சன்  வழக்கம் போல் சொற்ப ரன்களில்  பெவிலியன் திரும்ப, டு பிளசிஸ் 24 ரன்களிலும்,  ராயுடு வெறும் 5 ரன்களிலும்  வெளியேறினார். தோனி 16 ரன்களில்  ஆட்டமிழக்க, சென்னை அணி 15.4 ஒவர்களில் 121 ரன்கள் சேர்த்தது. வெற்றி பெற இன்னும் 41 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சென்னை வெற்றி பெறுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. 

csk

ஆனால் ரெய்னா – ஜடேஜா ஜோடியின் அதிரடியால் சென்னை அணி  19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 58 ரன்களும், ஜடேஜா ஆட்டமிழக்காமல்  31 ரன்களும் எடுத்தனர்.

csk

இதன் மூலம் சென்னை அணி  8 போட்டிகளில் 7 இல் வெற்றி பெற்று, 14 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை அணி எளிய இலக்காக இருந்தாலும், கடினமான இலக்காக இருந்தாலும் ஆட்டத்தின் பரபரப்புக்காக கடைசி ஓவரில் திக்.. திக்…நிமிடங்களுக்கு மத்தியில் வெற்றியைப் பெறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்று மற்ற அணி ரசிகர்கள் கருத்து  கூறி வருகின்றனர். 

இதையும் வாசிக்க: என்னது இளம் பெண்களின் கனவு நாயகனோட பிட்னெஸ் சீக்ரெட் இதுதானா?