வழக்கமா வயித்துல கத்திரிகோலு வச்சுதானே தைப்பீங்க? இதென்ன புதுசு டாக்டர் சார்?

 

வழக்கமா வயித்துல கத்திரிகோலு வச்சுதானே தைப்பீங்க? இதென்ன புதுசு டாக்டர் சார்?

வழக்கமா வயித்துல கத்திரிகோலு வச்சு தைப்பீங்க, சரி தொழில் கத்துக்கும்போது இதெல்லாம் சகஜம்னு விட்ருவோம், இது என்ன டாக்டர் புது ட்ரீட்மென்ட்டா இருக்கு?

மத்திய பிரதேசம், சாகர் மாவட்ட அரசு மருத்துவமனை போஸ்ட்மார்ட்டம் அதாவது பிணவறை. முந்தின நாள் இறந்த ஒரு மனிதனின் பிணம், உடல் கூறாய்வுக்காக கிடத்தப்பட்டிருக்கிறது. டூட்டிக்கு சரியான நேரத்தில் வரும் டாக்டர், நேராக பிணவறைக்கு வருகிறார். மேஜையின்மீது கிடத்தப்பட்டிருக்கும் பிணத்தை ஒரு நொடி பார்த்துவிட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கான கத்தி கபடா வகையறாக்களை ஒவ்வொன்றாக எடுத்து மேஜைமீது வைக்கிறார்.

Patient Under Treatment

“என்ன டாக்டர் எனக்கு ஆபரேஷன் எதுவும் பண்ணப் போறீங்களா?” என யாரோ கேட்க, டாக்டர் கூலாக பதில் சொல்கிறார். “ஆபரேஷன் இல்லப்பா, காட் வாஸ் நாட் சோ கிரேட் அபவுட் யூ, சோ, நேத்தே நீ இறந்துட்ட, உனக்கு இப்ப‌ போஸ்ட் மார்ட்டம் பண்ணப்போறேன்” என்க, உடனடியாக பதறி மேஜேமேல் எழுந்து உட்கார்ந்த பிணம், சாரி அந்த மனிதன், “என்ன டாக்டர் சொல்றீங்க, நான் பொணம் இல்ல, பேஷண்ட்” என பதற, அப்போதுதான் டாக்டருக்கும் உரைத்திருக்கிறது அது பிரம்மை அல்ல, நிஜம் என்று. உடனடியாக வார்டுக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்திருக்கிறார்கள். உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டார் என சர்ட்டிஃபிகேட் தந்த இன்னொரு மருத்துவருக்கு இப்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. வழக்கமா வயித்துல கத்திரிகோலு வச்சு தைப்பீங்க, சரி தொழில் கத்துக்கும்போது இதெல்லாம் சகஜம்னு விட்ருவோம், இது என்ன டாக்டர் புது ட்ரீட்மென்ட்டா இருக்கு?