வள்ளுவர் சிலைக்குக் காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர்..!

 

வள்ளுவர் சிலைக்குக் காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர்..!

திருவள்ளுவர் ருத்திராட்ச மாலை அணிந்திருப்பது போன்ற படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து மொழியில் திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டதிலிருந்து பா.ஜ.க கட்சியினர் திருவள்ளுவர் காவி நிற உடை அணிந்திருந்ததாகவும் அவருக்கு திமுக கட்சியினர் தான் வெள்ளை நிற ஆடையை அவர் பயன்படுத்தினார் எனச் சித்தரித்ததாகவும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். அது மட்டுமின்றி, திருவள்ளுவர் ருத்திராட்ச மாலை அணிந்திருப்பது போன்ற படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

valluvar

திருவள்ளுவர் எந்த மதத்தைச் சார்ந்தவர், எந்த நிற உடை பயன்படுத்தினார் போன்ற எந்த தகவல்களும் இன்றுமே எவருக்கும் கிடைக்கப்பெறாத நிலையில், திருவள்ளுவர் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்ற கருத்துக்கள் எழுவது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. 

இரண்டு நாட்களுக்கு முன்னர் திருச்சி பிள்ளையார் பட்டியில் உள்ள திருவள்ளுவரின் சிலை மீது மர்ம நபர்கள் சாணியைப் பூசிவிட்டுச் சென்றுள்ளனர். இதன் வீடியோ காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளதை வைத்து காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.

Valluvar

இந்நிலையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று பிள்ளையார் பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குக் காவி நிற துண்டு, திருநீறு பூசி, ருத்திராட்ச மாலை அணிவித்து கற்பூர தீப ஆராதனை காட்டியுள்ளார். 

Valuvar

திருவள்ளுவர் காவி நிற உடை அணிந்தது போலப் படங்கள் வெளியானது தமிழக மக்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  தற்போது திருவள்ளுவர் சிலையை இந்து மத கடவுள் போலச் சித்தரித்து கற்பூர தீப ஆராதனை ஏற்றியிருப்பது மற்ற அரசியல் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.