வலிமையான, வெண்மையான பற்கள்: திபெத் மக்களின் மருத்துவம்

 

வலிமையான, வெண்மையான பற்கள்: திபெத் மக்களின் மருத்துவம்

நம்மில் பலருக்கும் பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை இருக்கும். சிலருக்கு பற்கள் வலிமையாக இருக்காது. சிலருக்கு வெண்மையாக இருக்காது.

நம்மில் பலருக்கும் பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை இருக்கும். சிலருக்கு பற்கள் வலிமையாக இருக்காது. சிலருக்கு வெண்மையாக இருக்காது.

ஆனால் திபெத்திய மக்கள் முதுமையானாலும் அவர்களது பற்கள் வெள்ளையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இதற்கு அவர்கள் பின்பற்றி வரும் மருத்துவம் தான் காரணம். திபெத்திய மக்கள் மிகவும் பழமையான மருந்துகளைக் கொண்டுள்ளனர். அவர்களின் மருத்துவ முறையை உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

white teeth

அதன்படி, பற்கள் வலிமையாகவும், வெண்மையாகவும் இருக்க அவர்கள் என்ன செய்கிறார்கள்? தண்ணீர் – 1 கப்; உப்பு – 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்கவும், பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் உப்பை சேர்த்து, உப்பு நன்கு கரையும் வரை கலக்க வேண்டும். பயன்படுத்தும் முறை தினமும் காலையில், மாலையில் மற்றும் ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பின்னரும், இந்த உப்பு கலவையைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

white teeth

இதனால், சொத்தைப் பற்களுக்கு வழிவகுக்கும் நோயுண்டாக்கும் பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படும். இந்த முறையைப் பின்பற்றினால், பற்களில் உள்ள வெடிப்புக்கள் சரிசெய்யப்படும். இந்த முறையினால் பற்களின் இடுக்குகளில்சிக்கிய உணவுத் துகள்கள் வெளியேற்றப்படும். இதனால் பற்கள் சொத்தையடைவது தடுக்கப்படும். ஆரம்பத்தில் பற்களின் எனாமல் சிறிது குறைந்தாலும், பின் பற்களின் எனாமல் வலிமையடையக் கூடும்.

அடுத்ததாக அலுமினியத்தாள் சிகிச்சை:

பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்; உப்பு – 1/2 டீஸ்பூன்; தண்ணீர்சிறிது; அலுமினியத்தாள் சிறிய அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பேக்கிங் சோடா, உப்பு மற்றும் நீரை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் அதனை பற்களில் தடவிக் கொள்ள வேண்டும். பின் அலுமினியத்தாளைக் கொண்டு பற்களை மூடி சுமார் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிரஷ் கொண்டு பற்களை மென்மையாக தேய்த்து, குளிர்ந்த நீரில் நன்கு வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனை அடிக்கடி செய்யக் கூடாது.