‘வலிமை’க்காக புது கெட்டப்பில் தல…முரட்டு மீசையில் அசத்தும் அஜித்

 

‘வலிமை’க்காக புது கெட்டப்பில் தல…முரட்டு மீசையில் அசத்தும் அஜித்

போலீஸ் அதிகாரி கேரக்டர் என்பதால்  கார் சேசிங் காட்சிகள்  படத்தில் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.

‘வலிமை’  படத்தில்  நடிக்கவுள்ள அஜித்தின் அட்டகாசமான புதிய கெட்டப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ajith

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கிறார். இதற்காக அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார்.தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். போலீஸ் அதிகாரி கேரக்டர் என்பதால்  கார் சேசிங் காட்சிகள்  படத்தில் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.

ttn

இந்நிலையில் நேற்று நடிகை ஷாலினி அஜித் தனது 40 வது பிறந்தாளை  கொண்டாடினார். அப்போது  பர்த் டே பார்ட்டியில் கலந்து கொண்ட அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதில் கட்டுமீசையுடன் அஜித் மிரட்டலாக உள்ளார். இதை கண்ட அஜித் ரசிகர்கள் அதை இணையத்தில் வைரலாக்கி  வருகின்றனர்.