வரும் ஞாயிறு அன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி

வரும் ஞாயிறு அன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி

ஏப்ரல் 1 ஆம் தேதி 018-2019 நிதியாண்டு முடிந்து புதிய நிதியாண்டு துவங்க இருப்பதால் மார்ச் 31 அன்று அனைத்து வங்கிகளும் வழக்கம் போல செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 ஏப்ரல் 1 ஆம் தேதி 018-2019 நிதியாண்டு முடிந்து புதிய நிதியாண்டு துவங்க இருப்பதால் மார்ச் 31 அன்று அனைத்து வங்கிகளும் வழக்கம் போல செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நிதியாண்டின் கடைசி நாள் 

வருகிற மார்ச் 31ம் தேதியுடன் நிதியாண்டு முடிவடைவதையொட்டி, அன்றைய தினம், நாட்டில் அனைத்து நிறுவனங்களும் தங்களது வரவு செலவு கணக்கை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். அன்று தான் நிறுவனத்தார் வங்கிகளுக்கு படையெடுப்பார்கள். 

நிதியாண்டு

இந்நிலையில், இந்த வருடம் மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்று வங்கிகள் விடுமுறையாக இருந்தால் அது அரசுக்கும், நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கணக்கு வழக்குகளை முடிப்பதற்காக நிறுவனங்கள் ஏப்ரல் 1 – ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி குழப்பங்களுக்கு வழி வகுக்கும்.

விடுமுறை ரத்து 

மத்திய ரிசர்வ் வங்கி

இதனால் மார்ச் 31 – ஆம் தேதி அன்று அனைத்து வங்கிகளும் வழக்கம் போல் இயங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மேலும், மார்ச் 30 மற்றும் மார்ச் 31 ஆகிய தேதிகளில் ஆன்லைன் பண பரிவார்த்தனையும் செய்யலாம். வங்கிகளில் கவுண்டர்கள் வருகிற மார்ச் 30ம் தேதி இரவு 8 மணி வரையிலும் மார்ச் 31 அன்று மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.