வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

 

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

தணிக்கை அறிக்கைகள் தேவைப்படும் நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 31ம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.

வருமான வரி சட்டம் 44ஏபி-ன்படி, நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் உள்ளிட்ட பிரிவினரின் கணக்குகள் முதலில் தணிக்கை செய்யப்பட வேண்டும். அந்த தணிக்கை அறிக்கைகளை பெற்ற பிறகே அவர்கள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் வேண்டும். இது போன்ற சிறப்பு பிரிவினர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை வழங்கப்பட்டு இருந்தது.

மத்திய நேரடி வரிகள் வாரியம்

இந்நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் நாடு முழுவதிலிருந்தும் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. இதனை பரிசீலனை செய்த மத்திய நேரடி வரிகள் வாரியம், தணிக்கை அறிக்கைகள் தேவைப்படும் நிறுவனங்கள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 2019 அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தணிக்கை அறிக்கை

வருமான வரி துறைக்கு முக்கிய கொள்கைகளை உருவாக்கும் அமைப்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் விளங்குகிறது. கடந்த 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வருமான வரி கணக்கை தாக்கல் வேண்டும். இதற்கான கால அவகாசம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தணிக்கை அறிக்கை தேவைப்படும் நிறுவனங்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்குதான் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.