வருமானம் நல்லா இருக்கு… ஆனால் கடைசியில் நஷ்டம்தான்… சோகத்தில் ஏர்ஏசியா…..

 

வருமானம் நல்லா இருக்கு… ஆனால் கடைசியில் நஷ்டம்தான்…  சோகத்தில் ஏர்ஏசியா…..

ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.123.35 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது.

விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஏர்ஏசியா இந்தியா, 2019 டிசம்பர் காலாண்டில் ரூ.123.35 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். 2018 டிசம்பர் காலாண்டில் ஏர்ஏசியா இந்தியா நிறுவனத்துக்கு ரூ.166.15 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

ஏர்ஏசியா

விமான எரிபொருள் விலை அதிகமாக இருந்தது மற்றும் பணியாளர் செலவினம் அதிகரிப்பு போன்றவற்றுடன் பயன்பாட்டாளர் கட்டணங்கள் மற்றும் இதர செலவினங்கள் அதிகரித்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஏர்ஏசியா தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டில் ஏர்ஏசியா நிறுவனத்தின் மொத்த வருவாய் 65 சதவீதம் அதிகரித்து ரூ.1,057.55 கோடியாக உயர்ந்துள்ளது.

ஏர்ஏசியா

அதிக சராசரி கட்டணம் மற்றும் திறன் போன்ற காரணங்களால் வருவாய் அதிகரித்துள்ளதாக ஏர்ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் டாடாசன்ஸ் மற்றும் மலேசிய ஏர்லைன் குழுமம் ஏர்ஏசியாவின் முதலீட்டு நிறுவனமான ஏர்ஏசியா இன்வென்ஸ்மெண்ட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம்தான் ஏர்ஏசியா இந்தியா.