வருங்கால கணவனுடன் சென்ற மகள் பிணமாக வந்த சோகம்: கண்ணீர் மல்க பாட்டு பாடிய தந்தை!

 

வருங்கால கணவனுடன்  சென்ற மகள் பிணமாக வந்த சோகம்: கண்ணீர் மல்க பாட்டு பாடிய தந்தை!

ஆவடி அருகே பட்டாபிராம் காந்திநகரைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற காவலர் தாமஸ். இவரது மகள் மெர்சி. இவருக்கும் அத்தை  மகனான அப்பு என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர்களின் திருமணம் வரும் ஜனவரியில் நடக்க இருந்த நிலையில் மெர்சியும், அப்புவும் வெளியில் செல்லலாம் என்று நினைத்து பைக்கில் சென்றுள்ளனர். 

LOVE

சென்னை – மீஞ்சூர் சாலையில் சென்றபோது, வயலில் ஃபோட்டோ எடுக்கலாம் என்று எண்ணி பைக்கை நிறுத்திவிட்டு சென்றனர். அப்போது அங்கு கிணறு ஒன்று இருந்துள்ளது. அதை கண்ட மெர்சி கிணற்றில் இறங்கி படிக்கட்டில் நின்று  செல்பி மோகத்தில் எடுக்க  வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு நீச்சல் தெரியாது என்று கூறி அப்பு மறுக்க பிடிவாதமாக உள்ளே இறங்கிய அவர், கால் இடறி உள்ளே விழுந்துள்ளார். உடனே அப்புவும் காதலியை காப்பாற்ற உள்ளே குதித்துள்ளார்.  இதில் மெர்சி பரிதாபமாக இறக்க, விவசாயி ஒருவர் அப்புவை உயிருடன் மீட்டுள்ளார்.

CRIME

இந்நிலையில் மெர்சியின் உடலை கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.  பொதுவாக மெர்சிக்கு பாட்டு பாடுவதில் ஆர்வம் இருந்ததால் அவரது தந்தை  மெர்சியின் உடலுக்கு அருகில் அமர்ந்து கொண்டு, ‘அல்லேலுயா, துன்பமும் துயரமும் வேதனையோ உம்மை விட்டு’…. என்று தொடங்கும் பாடலைக் கண்ணீர் மல்கப் பாடினார். இதைக் கண்டு  அங்கிருந்தவர்கள் துக்கம் தாளாமல் கதறி அழுதனர்.