வருங்காலத்தில் திரைப்பட உலகம் வெப் சீரிஸுக்குள்தான் இருக்கும்: கௌதம் மேனன் சொல்லும் ரகசியம்!

 

வருங்காலத்தில் திரைப்பட உலகம் வெப் சீரிஸுக்குள்தான் இருக்கும்: கௌதம் மேனன் சொல்லும் ரகசியம்!

சமீபத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஈங்கூரிலுள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

வித்தியாசமான கதையம்சம், அழகான காதல் கதை, நேர்த்தியான வசனங்கள் என தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில்  ஒருவராக வலம்  வருபவர்  இயக்குநர்  கௌதம் வாசுதேவ் மேனன். இவர் சமீபத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஈங்கூரிலுள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘2 மணிநேரத்தில் நல்ல கதையம்சத்துடன் கூட படங்களைத் தரமுடியாது என நினைப்பவர்கள் வெப் சீரிஸுக்குள் நுழையலாம்.  சுதந்திரமாகப்  பல மணிநேரங்கள், பல தொகுப்புகளாகக் கதைகளைச் சொல்லலாம். அதனால் தான்  உலகிலுள்ள முக்கிய கலைஞர்கள் வெப் சீரிஸில் நுழைந்துள்ளனர்’ என்றார்.

ttn

கட்டுப்பாடுகள் இல்லாததால் தான் வெப்சீரிஸுக்குள்  நுழைகிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘கட்டுப்பாடுகளை இயக்குநர்கள்  தான் அமைத்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது அனைவரும் பார்க்க கூடிய படமாக இருக்கும். இது இத்திரைப்படங்களுக்கான மாற்று வடிவம். வரும்காலத்தில் திரைப்பட உலகம் வெப் சீரிஸுக்குள்தான் இருக்கும்’ என்று  பதிலளித்தார்.