வருகிறது ரஜினி டி.வி… கட்சியை அறிவிக்கிறார் ரஜினி… கலக்கத்தில் தமிழக அரசியல் கட்சிகள்..!

 

வருகிறது ரஜினி டி.வி… கட்சியை அறிவிக்கிறார் ரஜினி… கலக்கத்தில் தமிழக அரசியல் கட்சிகள்..!

ரஜினி திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், கட்சி தொடங்குவதற்கான பணிகளும் ஜரூராக நடந்து வருகிறது

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்று சுமார் 23 ஆண்டுகளாக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கு சப்தமின்றி செயல்வடிவம் கொடுத்து வருகிறார்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் தனது அரசியல் வருகையை உறுதிபடுத்தினார். அப்போது பேசிய அவர், புதிதாக அரசியல் கட்சி தொடங்கி வரும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார்.

rajini

இது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி ரசிகர்களை ஏமாற்றி வருகிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால் ரஜினி மக்கள் மன்றத்தை வலுவான இயக்கமாக மாற்றும் வேலைகள் கச்சிதமாக நடந்து வருகிறது.

 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ’தர்பார்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார். எனவே ரஜினியின் அரசியல் வருகை எப்போது? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அதேசமயம் அவரது ரசிகர்களை சோர்வடையச் செய்துள்ளது.

Rajini

ஆனால், ரஜினிகாந்த் திரைப்படங்களில் ஒப்பந்தமானாலும், அவரது மக்கள் மன்றத்தின் அரிடம் கட்சி பொறுப்புகளை நம்பி முழுமையாக ஒப்படைத்து சென்று இருக்கிறார்.  சில தினங்களுக்கு முன் 100 பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராமம், நகரம், மாநகரம், மாநில நிர்வாகிகள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டு இருந்தாலும், இன்னும் மன்றத்தை சப்தமின்றி வலுவாக கட்டமைத்து வருகிறார்கள். நிச்சயம் இந்த சட்டமன்றத்தேர்தலில் ரஜினி கட்சி தனித்து போட்டியிடுவது உறுதி.

Rajini

கட்சியை ஆரம்பித்த கையோடு கட்சி கொள்கைகள், பிரச்சாரங்களை காட்ட சொந்தமாக ஒரு தொலைக்கட்சியையும் ஆரம்பிக்க இருக்கிறார் ரஜினி. அதற்கான முன்னோட்ட பணிகளையும் இப்போதே தொடங்கி விட்டார்கள். ஆக ரஜினி திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும், கட்சி தொடங்குவதற்கான பணிகளும் ஜரூராக நடந்து வருகிறது என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.