வரி ஏய்ப்பு புகார்! கல்கி குடும்பத்தினர் மருத்துவமனையிலிருந்து எழுந்து வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர் 

வரி ஏய்ப்பு புகார்! கல்கி குடும்பத்தினர் மருத்துவமனையிலிருந்து எழுந்து வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர் 

கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா மற்றும் மருமகள் ப்ரீதா இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர்.  

கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா மற்றும் மருமகள் ப்ரீதா இருவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர்.  

ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்திலும் அவரது மகன் என்.கே.வி கிருஷ்ணாவிற்குச் சம்பந்தப்பட்ட சென்னை உள்ளிட்ட 40 இடங்களிலும் வருமான வரித்துறையினர் கடந்த 17 ஆம் தேதி முதல் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். 5 நாட்களாக நடந்து வந்த சோதனை இன்றோடு நிறைவடைந்த நிலையில், கல்கி பகவானும் அவரது மகனும் 800 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கல்கி பகவானின் இல்லத்தில் கணக்கில் வராத  20 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் மற்றும்  90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

IT Raid

ஆனால் வருமானவரித்துறையினர் சம்மன் அனுப்பி ஆஜராகவில்லை கைது செய்துவிடுவார்கள் என்பதை உணர்ந்த கல்கி மகன் மற்றும் அவரது மனைவி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்தனர்