வரலாறு தெரியாமல் உளறாதீங்க ரஜினிகாந்த் -டிடிவி தினகரன் 

 

வரலாறு தெரியாமல் உளறாதீங்க ரஜினிகாந்த் -டிடிவி தினகரன் 

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது.  இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது,

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது.  இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு  செருப்பு மாலை போடப்பட்டது என தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரஜினியோ நான் செய்தித்தாளில் வந்ததைதான் பேசினேன் இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என தெரிவித்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ரஜினிகாந்த்

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தந்தை பெரியார் என்பவர் தனி மனிதரல்ல; அவர் ஒரு இயக்கம். பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது. தமிழருவி மணியன் போன்றோரிடம் விவரங்களை கேட்டறிந்து அதன்பின் ரஜினி பேசியிருக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை அதிகாரிகள் முனைப்போடு செயல்பட வேண்டும். சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை” என தெரிவித்தார்.