வரப்போவது தி.மு.க ஆட்சிதான்… மக்கள் பணிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்! – உற்சாகமூட்டிய மு.க.ஸ்டாலின் 

வரப்போவது தி.மு.க ஆட்சிதான்… மக்கள் பணிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்! – உற்சாகமூட்டிய மு.க.ஸ்டாலின் 

தி.மு.க வெற்றிபெற்ற ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கும் என்று அ.தி.மு.க அமைச்சர் கூறிய நிலையில், அடுத்து வர இருப்பது தி.மு.க ஆட்சிதான்… அப்போது மக்கள் பணிக்குத் தேவையான முழு உதவியும் கிடைக்கும் என்று உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

mk-stalin-09

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க நிர்வாகிகள் மாநாடு திருச்சியில் நடந்து வருகிறது. இதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“தி.மு.க மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெற்ற மகத்தான வெற்றியே, நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு சாட்சி. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மகத்தான வெற்றி பெறுவதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் மேற்கொள்ளும் பணிகள் முக்கிய பங்காற்றும். தி.மு.க சார்பில் வென்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளை ஆளுங்கட்சியினர் சுதந்திரமாக செயல்படவிடமாட்டார்கள். பல்வேறு இடையூறுகளை அமைச்சர்கள், ஆளுங்கட்சிக்குத் துணைபோகும் அதிகாரிகள் கொடுக்கக்கூடும். ஆனால் அப்படி எந்த இடையூறுகள் வந்தாலும், எதிர்த்து நின்று மக்கள் பணியாற்ற வேண்டும்.
அரசின் அதிகார அநியாயங்களையும், தேர்தல் ஆணையத்தின் அக்கிரமங்களையும் மீறி வெற்றி பெற்றிருக்கிறீர்கள். அதனால்தான் இது சாதாரண வெற்றியல்ல; மகத்தான வெற்றி. உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சித் தலைமைக்கும், நம்பிக்கை கொண்டு வாக்களித்த மக்களுக்கும் விசுவாசமாக இருக்கவேண்டும். சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரே ஆண்டில் வரும். அப்படித் தேர்தல் வந்தால் உறுதியாக தி.மு.கவே ஆட்சிக்கு வரும். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் மக்கள் பணிக்குத் தேவையான முழு உதவியும் செய்து தரப்படும்” என்றார்.