வரனே ஆவஸ்யமுண்டு (மனமகன் தேவை) – மலையாளம் மூவி விமர்சனம்

வரனே ஆவஸ்யமுண்டு (மனமகன் தேவை) – மலையாளம் மூவி விமர்சனம்

கணவனைப் பிரிந்து சென்னையில் வாழும் சோபனாவின் ஒரே மகள் நிக்கி என்கிற கல்யாணி பிரியதர்சன். பெயர்தான்  மேஜர் உண்ணிக் கிருஷ்ணன். ஆனால் கொடூரக் கோபக்காரனாக வரும் சுரேஷ் கோபி. இவர்கள் வாழும் சென்னை ஃபிளாட்டுக்கு சதா தம்பியோடு கட்டிப்புரண்டு சண்டை போட்டபடி சீரியல் நடிகையான கேபிசி லலிதா பாட்டியுடன் குடிவரும் ஃபிராடு என்று அழைக்கப்படும் துல்ஹர் ரஹ்மான். இந்த நாலுபேர்தான் படம்.

varane avashyamundu

பெரிதாக கதையெல்லாம் கிடையாது, நிக்கி தனக்கு மணமகன் தேடுகிறாள், அதுதான் ஒரே நூல், அதை அடுத்து , மீன் சமைக்க அனுமதிக்கும் ஃபிளாட் ஓனர் மாமி, முரடன் முத்துவாக இருக்கும் சுரேஷ் கோபியின் டாக்ட்டர், குக்கர் அம்மா, பெசண்ட் நகர் பீச், முருகன் பாட்டுப் பாடும் கொலு, ஒரு டிராஃபிக் இன்ஸ்பெக்டர் என்று ஏகப்பட்ட உதிரிகளை தொடுத்துச் செல்கிறது அனூப் சத்யனின் திரைக்கதை.

varane-avashyamundu-02

மலையாளத்தில் குடும்பக் கதைகளுக்குப் பெயர்போன இயக்குநரான சத்யனின் மகன் இந்த அனூப் சத்யன். தந்தையின் பாதையில், ஒரு மாநகரப் பின்னணியில் ஒரு ஃபீல்குட் படம் கொடுத்து இருக்கிறார். படம் முழுக்க தியேட்டரில் அங்கங்கே சிரிப்பொலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. இத்தனைக்கும் காட்சிகளை யூகிக்க முடிகிறது. சுரேஷ்கோபி அந்த ஊர் விஜயகாந்த் என்பதால் வலியத் தினித்த ஒரு ஃபைட் இருக்கிறது. ஆனாலும், 2013க்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் சோபனா, சென்னையை புகழ்ந்து ( வழக்கம்போல மதராஸி என்று) ஒரு பாட்டு என்று நிறைய ஆச்சர்யங்களோடு நகர்கிறதுபடம்.

ஒருகாலத்தில் சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் மம்முட்டி நடித்தது போக அந்திக்காட்டின் மகன் அனூப் இயக்க மம்முட்டியின் மகன் துல்கர் தயாரித்து நடித்த படம் இது. ஒரு நல்ல நட்பு தலைமுறை தாண்டி தொடர்கிறது.