வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்வு!

 

வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்வு!

வடக்கிழக்கு பருவ மழையின் காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் இந்த வருடம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது. வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100 வரையில் விற்று வந்த நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக தமிழகத்திற்கு தேவையான வெங்காயங்களை ஆந்திரா, கர்நாடகா என்று வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

வடக்கிழக்கு பருவ மழையின் காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் இந்த வருடம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது. வெங்காயத்தின் விலை கிலோ ரூ.100 வரையில் விற்று வந்த நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக தமிழகத்திற்கு தேவையான வெங்காயங்களை ஆந்திரா, கர்நாடகா என்று வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. அதன் பிறகு வெங்காயத்தின் விலைகளில் மாறுதல் ஏற்பட்டு, கிலோ ரூ.80 ரூபாய், பின்னர் ரூ.60 என்று படிபடியாக குறையத் துவங்கியது. 

onion

இந்நிலையில்  தற்போது வெளிமாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்துக் கொண்டிருந்த வெங்காயத்தின் வரத்து மீண்டும் அதிரடியாக குறையத் துவங்கியதால் மீண்டும் வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்து தற்போது 100 ரூபாய் வரையில் விற்கப்பட்டு வருகிறது.
இன்றைய கோயம்பேடு மார்க்கெட் நிலவரப்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பாக 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.