வரதட்சணை கொடுமையால் கோவையில் செவிலியர் கொலை!?..

 

வரதட்சணை கொடுமையால் கோவையில் செவிலியர் கொலை!?..

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி.நேற்று இரவு முடி வெட்டுவதற்காக வெளியில் போயிட்டு வீட்டுக்கு திரும்பியவருக்கு பயங்கர அதிர்ச்சி! அவரது மனைவி, பண்டி மீனா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார்.அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முரளி…மனையின் உயிரைக் காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்.ஆனாலும் கீழே இறக்கும் போதே உயிர் போய்விட்டதாம்!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி.நேற்று இரவு முடி வெட்டுவதற்காக வெளியில் போயிட்டு வீட்டுக்கு திரும்பியவருக்கு பயங்கர அதிர்ச்சி! அவரது மனைவி, பண்டி மீனா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்திருக்கிறார்.அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முரளி…மனையின் உயிரைக் காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்.ஆனாலும் கீழே இறக்கும் போதே உயிர் போய்விட்டதாம்! உடனடியாக பாண்டி மீனாவின் பெற்றோருக்கு கண்ணீருடன் தகவல் தெரிவித்திருக்கிறார்.

suicide

இது முரளி பொது வெளியிலும் போலீஸிலும் சொன்ன தகவல்.உண்மை நிலவரம் அதுவல்ல என்று மறுக்கிறார்கள் பாண்டி மீனாவின் உறவினர்கள்.பாண்டி மீனா,சூலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது.நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.முரளி,அவ்வப்போது வரதட்சணை கூடுதலாக வேண்டும் என்று பாண்டி மீனாவைக் கொடுமைப்படுத்துவாராம்.

nurse

அப்படி கொடுமைக்கு பயந்து தனது பெற்றோர்களிடம் சமீபத்தில் நான்கு லட்சம் ரூபாய் வாங்கி வந்து முரளியிடம் கொடுத்திருக்கிறார்.அதனால்,இது திட்டமிட்ட கொலை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள் பாண்டி மீனாவின் உறவினர்கள்.சூலூர் பொலிஸார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.