வரதட்சணை கொடுத்து பெண் கேட்கும் வட இந்திய இளைஞர்கள்!

 

வரதட்சணை கொடுத்து பெண் கேட்கும் வட இந்திய இளைஞர்கள்!

“அழகான, படித்த மணப்பெண்ணுக்கு ஏற்ற சீர்வரிசையை நாங்களே தந்து திருமணம் செய்துகொள்கிறோம்” என காடு, மலை எல்லாம் தேடியும் பெண் கிடைக்காததால், பக்கத்து மாநிலம் மட்டுமல்ல பக்கத்து நாடான நேபாளம் வரைக்கும்போய் வரதட்சணை குடுத்து பெண் எடுத்து வருகிறார்களாம்.

“இங்கே நல்ல மீன்கள் விற்கப்படும்” அறிவிப்பு பலகை கொஞ்சம் கொஞ்சமாக கழுதை தேய்ந்து கட்டெறும்பாகுமோ, அதேபோல் ஆகியிருக்கிறது சில வடமாநில இளைஞர்களின் நிலை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அப்பக்கமெல்லாம் பெண் சிசுக்கொலை சர்வசாதாரணம். இதனால் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆண் – பெண் விகிதாசாரம் கடுமையாக ஏற்றத்தாழ்வில் இருக்கிறது. விளைவு? திருமணத்துக்கு மணப்பெண் கிடைப்பதில்லை. எனவே, திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு புது வண்டி, பெண்ணுக்கு இத்தனை சவரன், கல்யாண செலவு என வரிசைகட்டிய சீர்வரிசை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியிருக்கிறது. “அழகான, படித்த, சீர்வரிசையோடு கூடிய மணப்பெண் தேவை” விளம்பரங்கள் சற்றே மெலிந்து, “அழகான, படித்த, ஓரளவு சீர்வரிசை செய்யக்கூடிய மணப்பெண் தேவையாக பரிணாம வளர்ச்சி அடைந்து, ஒருகட்டத்தில் “அழகான, படித்த மணப்பெண் தேவை” என்றாகியும் பெண் கிடைக்காமல், அழகான மணப்பெண் தேவையும் வேலைக்காமல், “மணப்பெண் தேவை” என்பதில் வந்து முடிந்திருக்கிறது.

Groom pays dowry to Bride

பரவாயில்லையே, எந்த கண்டிஷனும் இல்லாமல் இருக்கும்போது சுலபமாக மணப்பெண் கிடைத்து திருமணம் நடந்திருக்குமே என்றால், அதுதான் இல்லை. ஏன்னா, அங்கதான் பெண்களே இல்லையே. எனவே, வேறு வழியில்லாமல் “அழகான, படித்த மணப்பெண்ணுக்கு ஏற்ற சீர்வரிசையை நாங்களே தந்து திருமணம் செய்துகொள்கிறோம்” என காடு, மலை எல்லாம் தேடியும் பெண் கிடைக்காததால், பக்கத்து மாநிலம் மட்டுமல்ல பக்கத்து நாடான நேபாளம் வரைக்கும்போய் வரதட்சணை குடுத்து பெண் எடுத்து வருகிறார்களாம். பெண்ணின் குடும்பத்துக்கு எவ்வளவு பணம் தர வேண்டும் என்பதை முடிவுசெய்ய்ய மணப்பெண்ணின் அழகு, படிப்பு, குடும்ப பின்னணிக்கு ஏற்றவகையில் பேரம் பேசி முடித்துவைக்கும் தரகர்கள் பெருகியிருக்கிறார்கள். குறைந்தபட்சம் 35,000 ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம்வரை மணமகன்கள் விலைபோகிறார்களாம்.