வயநாடு எம்.பி. ராகுல் எழுதும் மடல், விண்ணப்பம், இல்ல கோரிக்கை!

 

வயநாடு எம்.பி. ராகுல் எழுதும் மடல், விண்ணப்பம், இல்ல கோரிக்கை!

மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ள ராகுல் காந்தி, தனது தொகுதி மக்களின் 13 வருட கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு ஆட்சித்தலைவருக்கு கடிதம் மூலம் விண்ணப்பம் அனுப்பியுள்ளார்.

முதன்முறையாக கேரள, வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ராகுல் காந்தி தனது தொகுதிகுட்பட்ட பகுதியான திருநெல்லி கிராமத்தில் நிரந்தர பாலம் அமைத்து தருமாறு வயநாடு ஆட்சித்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு உண்டான வெள்ளப்பெருக்கில் அங்கிருந்த பாலம் அடித்து செல்லப்பட்டதில் இருந்து அப்பகுதி மக்கள் மூங்கில் கழிகளால் ஆன தற்காலிக பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர். காங்கிரீட் பாலமே அடித்துச் செல்லப்பட்டுவிட்ட நிலையில், மூங்கில் பாலம் மட்டும் நிற்குமா என்ன? அடுத்துவந்த வெள்ளத்தில் அதுவும் அடித்து செல்லப்பட்டுவிட்டது.

Temporary bridge construction underway

போக்குவரத்துக்கு வேறு வழி இல்லாததால், மக்கள் திரும்பவும் மூங்கில் பாலம் கட்ட, அடுத்த வருட வெள்ளம் வந்து அடித்துக்கொண்டு போக என இதுவே தொடர்கதையாகி இருக்கிறது. இரண்டு மூன்று வருடங்கள் பொறுத்துப் பார்த்த மக்கள் உஷாராகி, வெள்ளம் வருவதற்கு முன்பாகவே தற்காலிக மூங்கில் பாலத்தை தனியாக கொண்டுபோய் பத்திரப்படுத்தி வைத்துவிடுவார்களாம். இப்போது கேரளாவில் சீசன் முடிவுக்குவரும் நிலையில் திரும்பவும் மூங்கில் பாலம் அமைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் கிராம மக்கள். இவற்றை மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ள ராகுல் காந்தி, தனது தொகுதி மக்களின் 13 வருட கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு ஆட்சித்தலைவருக்கு கடிதம் மூலம் விண்ணப்பம் அனுப்பியுள்ளார்.