வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது :உற்சாகத்தில் ரசிகர்கள்! 

 

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது :உற்சாகத்தில் ரசிகர்கள்! 

நடிகர் சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

சென்னை : நடிகர் சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான செக்க சிவந்த வானம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து படுபிஸியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளிவர உள்ளது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

vantha rajavathaan varuven

இந்நிலையில், இப்படத்திற்கு சென்சார் போர்ட் “யூ” சான்றிதழ் அளித்துள்ளதாக இப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதை தற்போது அந்த படத்தின் ரசிகர்கள்  கொண்டாடி வருகின்றனர்.