வண்டலூர் பூங்காவில் வெள்ளை புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

 

வண்டலூர் பூங்காவில் வெள்ளை புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் 10 வயதான பெண் வெள்ளை புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.

வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அனு என்ற பெண் வெள்ளை புலியை அடுத்த 6 மாதங்களுக்கு சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். இதன் மூலம் இந்த வெள்ளை புலியின் 6 மாத உணவுக்கான பொறுப்பை சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார்.

anu tigress

அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் விலங்குகளை தத்தெடுத்து வளர்க்கும் சட்டம் கடந்த 2009ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடிப்படையில் சிவகார்த்திகேயன் அனு என்ற வெள்ளை புலியை தத்தெடுப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை பூங்கா இயக்குநர் யுவராஜிடம் வழங்கியுள்ளார்.

sivakarthikeyan

வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கம், புலி போன்ற விலங்குகளின் உணவுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.1,196 செலவிடப்படுவதாக கூறப்படுகிறது. அழிந்து வரும் இதுபோன்ற அரிய வகை விலங்குகளை பாதுகாக்க பொதுமக்கள் ஏதேனும் ஒரு வன விலங்கை தத்தெடுக்க முன்வர வேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டார்.