வடிவேலுவின் மூளையை பயன்படுத்திய திருடர்கள்… திருடிவிட்டு மிளகாய் பொடியை தூவி விட்டு என்ற  ‘‘பலே’’ திருடர்கள்!!

 

வடிவேலுவின் மூளையை பயன்படுத்திய திருடர்கள்… திருடிவிட்டு மிளகாய் பொடியை தூவி விட்டு என்ற  ‘‘பலே’’ திருடர்கள்!!

கேரள மாநிலம் குமுளியில் விநோத கொள்ளை சம்பவத்தில் அரங்கேறியுள்ளது. 

கேரள மாநிலம் குமுளியில் விநோத கொள்ளை சம்பவத்தில் அரங்கேறியுள்ளது. 

அமராவதி பகுதியில் உள்ள மளிகையைக் கடையை, ஜோசஃப் என்பவர் நிர்வகித்து வருகிறார். அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை இருப்பு வைப்பதற்காக கடையின் பின்புறமே சரக்கு குடோன் ஒன்றும் உள்ளது. அடையாளம் தெரியாத சில நபர்கள் அந்த கடையில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர். நேரடியாக கடைக்குள் சென்றால் சிக்கிவிட வாய்ப்பு இருப்பதாக எண்ணிய கொள்ளையர்கள், பின்புறம் உள்ள குடோன் வழியாக உள்ளே நுழைவதற்கு பக்காவான ப்ளானைப் போட்டிருக்கிறார்கள். அதன்படி, குடோனில் உள்ள வென்டிலேட்டரை பெயர்த்து எடுத்த கொள்ளையர்கள், அதன் வழியாக உள்ளே புகுந்து மளிகைக்கடைக்குச் சென்றனர். 

கல்லாவை உடைத்துப் பார்த்தப்போது அதில் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் இருந்தது கொள்ளையர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. வேறு வழியில்லாததால், எடுத்தவரை லாபம் என கல்லாவை காலி செய்த கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

அங்கேதான் வடிவேலுவின் மூளையை திருடர்கள் பயன்படுத்தியுள்ளனர். காவல்துறையிடம் சிக்காமல் தப்புவதற்காகவும், விசாரணையை திசை திருப்ப அறிவியல் ரீதியாக யோசித்த கொள்ளையர்கள், கடையில் பல்வேறு இடங்களில் மிளகாய்ப்பொடியைத் தூவிவிட்டு தப்பியுள்ளனர். மோப்ப நாய் மூலம் சில தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிடலாம் என்பதால், அதைத் தடுக்க சினிமா ஸ்டைலில் மிளகாய்ப்பொடி சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. சம்பவம் தொடர்பாக வழகுப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் மிளகாய்ப்பொடி கொள்ளையர்கள் தேடி வருகின்றனர்.