வடமேற்கு திசையை நோக்கிச் செல்லும் மஹா புயல் : தமிழகத்தில் மழை குறையும்..

 

வடமேற்கு திசையை நோக்கிச் செல்லும் மஹா புயல் : தமிழகத்தில் மழை குறையும்..

லட்சத்தீவு கடற்பகுதியில் உருவாகிய மஹா புயல் கேரளா திருவனந்தபுரத்திலிருந்து 320 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது.

லட்சத்தீவு கடற்பகுதியில் உருவாகிய மஹா புயல் கேரளா திருவனந்தபுரத்திலிருந்து 320 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது. மணிக்கு 75 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசிக்கூடிய இந்த புயல், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அதிதீவிர புயலாக மாறும் என்றும் இதனால், தமிழகம் முழுவதிலும் கன மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த புயலால் பாதிப்பு ஏதும் நிகழாமல் இருக்கத் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தது. 

Maha

இந்நிலையில், மஹா புயல் மணிக்கு 17 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்போது மங்களூரிலிருந்து 320 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தில் மழை குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கேரளா, லட்சத்தீவு, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.