வடகொரியாவுடன் அணுஆயுத பேச்சுவார்த்தை – அதிபர் டிரம்ப் பேட்டி!!

வடகொரியாவுடன் அணுஆயுத பேச்சுவார்த்தை – அதிபர் டிரம்ப் பேட்டி!!

வடகொரியா நாட்டுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டியளித்துள்ளார்.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரிய அதிபர் கிங் காங் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டார். இதற்கு வன்மையாக எதிர்ப்பு வலுத்ததையடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தென்கொரியா எல்லைப்பகுதியில் அமெரிக்க ராணுவமும் தென்கொரிய ராணுவமும் இணைந்து ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டது. இதனை எதிர்த்த வடகொரியா உடனடியாக நிறுத்தும்படி கோரிக்கை விடுத்தது. இருப்பினும் இரு நாடுகளும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த வடகொரியா மீண்டும் சிறிய ரக ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. 

trump

இதன் காரணமாக, அமெரிக்காவிற்கும் வட கொரியாவுக்கும் இடையே போர் ஏற்படும் என பலராலும் கருதப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, வடகொரியா மீண்டும் அமைதி கண்டதால் போர் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் வடகொரிய அரசு அணு ஆயுதம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுத்தது. 

ஏற்கனவே, இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டதால், இந்த பேச்சுவார்த்தை தடைபட்டது. இதனிடைய மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வடகொரியா அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து வருகிற அக்டோபர் 5ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே ஸ்வீடனில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. 

இதனை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இருப்பினும் பேச்சுவார்த்தை துவங்குவதற்கு இரு நாட்களுக்கு முன்பாக வடகொரியா தனது நீர்மூழ்கி கப்பல் மூலம் சிறிய ரக ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. இதனை அமெரிக்க தரப்பு வன்மையாக கண்டித்தது. வடகொரியாவின் இந்த தகாத செயலால் பேச்சுவார்த்தை தடைபடும் என பேசப்பட்டு வந்தது. 

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியின்போது, வடகொரியா பேச்சுவார்த்தையை தொடங்க நினைக்கிறது. தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வந்தாலும், வடகொரியாவின் விருப்பப்படி பேச்சுவார்த்தை எந்தவித தடையும் இன்றி நடைபெறும். பேச்சுவார்த்தைக்கு பிறகு உரிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

-vicky