வங்கி ஸ்டிரைக் கிடையாது….. ஆனால் இந்த மாதம் மொத்தம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை….

 

வங்கி ஸ்டிரைக் கிடையாது….. ஆனால் இந்த மாதம் மொத்தம்  வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை….

தமிழகத்தில் இந்த மாதம் வார விடுமுறை உள்பட மொத்தம் 9 தினங்கள் வங்கிகள் செயல்படாது. இந்த மாதம் 3 நாட்கள் நடைபெறுவதாக இருந்த வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2020 மார்ச் மாதம் மொத்தம் வார விடுமுறை உள்பட மொத்தம் 8 நாட்கள் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகையை கணக்கில் கொண்டு அங்கு மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி, தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு இம்மாதம் 25ம் தேதி தமிழகத்தில் வங்கிகளுக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை தினங்கள்

விடுமுறை தினங்கள்      விடுமுறை
மார்ச் 01                                வார விடுமுறை
மார்ச் 08                                வார விடுமுறை 
மார்ச் 10                                ஹோலி
மார்ச் 14                               இரண்டாவது சனிக்கிழமை
மார்ச் 15                               வார விடுமுறை
மார்ச் 22                               வார விடுமுறை
மார்ச் 25                             தெலுங்கு வருட பிறப்பு
மார்ச் 28                              நான்காவது சனிக்கிழமை
மார்ச் 29                             வார விடுமுறை

வங்கி விடுமுறை (கோப்பு படம்)

இந்த மாத வங்கி விடுமுறை தினங்களை மனதில் வைத்து உங்க வங்கி தொடர்பான வேலைகளை திட்டமிட்டு வைத்து கொள்ளுங்கள். சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், இம்மாதம் 11ம் தேதி முதல் வங்கி பணியாளர்கள் மேற்கொள்ள இருந்த 3 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அனைத்து இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.