வங்கிகள் வழக்கம் போலவே இயங்கும்! 7 நாட்கள் விடுமுறை கிடையாது! 

வங்கிகள் வழக்கம் போலவே இயங்கும்! 7 நாட்கள் விடுமுறை கிடையாது! 

‘காணாமல் போன சான்றிதழ்கள், காஞ்சிபுரத்தில் பேருந்து விபத்து, இதை ஷேர் செய்யலைன்னா நீங்க இந்தியனே கிடையாது’  போன்ற செய்திகள் வாட்ஸ் -அப் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் இருந்தே வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு செய்தியை உறுதிப்படுத்தாமல், யான் பெற்ற இன்பம் என்கிற ரீதியில், நம்முடைய வாட்ஸ் அப்பில் வந்தவுடனேயே அடுத்த நிமிடத்தில் நாம் இருக்கும் அத்தனை வாட்ஸ் அப் குரூப்களுக்கும் அதை பார்வார்ட் செய்து வருவதால், எப்போதும் ஒரு வித பதட்டமான சூழ்நிலையிலேயே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

bank

இந்நிலையில், இந்த மாதத்தின் இறுதியில், வங்கிகள் தொடர் விடுமுறையில் இருக்கின்றன. தொடர்ந்து 7 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. உங்களது கணக்கில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்கிற தகவல் கடந்த ஒரு வார காலமாகவே வாட்ஸ் அப் செயலியில் வலம் வரத் துவங்கின. எல்லோரும் பதறியடித்துக் கொண்டு, அவரவர் கணக்குகளில் இருந்து ஒரே நேரத்தில் ஏடிஎம் வாசலில் நிற்க ஆரம்பித்தனர். அனைவரும் ஒரே நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்த துவங்கியதால், தமிழகத்தில் பாதி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் இல்லாத நிலையே காணப்பட்டது. வங்கிகளிலும், வழக்கத்தை விட இந்த வாரம் கூடுதலான கூட்டம் நிறைந்து காணப்பட்டது. பலரும், தாங்கள் கட்ட வேண்டிய தவணைத் தொகைகளை எல்லாம் முன்கூட்டியே தங்களது கணக்குகளில் கட்டி வைத்திருந்தனர்.

bank

இந்நிலையில், வங்கிகளுக்கு 7 நாட்கள் தொடர் விடுமுறை கிடையாது என்று அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். பொதுத்துறை வங்கிகள் இணைப்பைக் கண்டித்து செப்டம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.  வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள தினத்திலும் வழக்கமான வங்கி நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். அதே போல் அரை நிதியாண்டு கணக்கு முடிக்கும் செப்டம்பர் 30 ஆம் தேதியும், அக்டோபர் ஒன்றாம் தேதியும் விடுமுறை இல்லை என்று வங்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பொதுத்துறை வங்கி தொழிற்சங்கங்கள் மட்டுமே வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால் தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் வழக்கமாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.