வங்கிகளில் கடன் வாங்க சரியான தருணம்?… ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை மேலும் 0.75 சதவீதம் குறைக்கும்… பிட்ச் சொல்யூஷன்ஸ் கணிப்பு….

 

வங்கிகளில் கடன் வாங்க சரியான தருணம்?… ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை மேலும் 0.75 சதவீதம் குறைக்கும்… பிட்ச் சொல்யூஷன்ஸ் கணிப்பு….

2021 மார்ச் மாதத்துக்குள் இந்திய ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை மேலும் 0.75 சதவீதம் குறைக்கும் என எதிர்பார்ப்பதாக பிட்ச் சொல்யூஷன்ஸ் தெரிவித்துள்ளது.

பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிட்ச் சொல்யூஷன்ஸ் கடன் மற்றும் மேக்ரோ நுண்ணறிவு தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில், பிட்ச் சொல்யூஷன்ஸ் தனது அறிக்கையில், கோவிட்-19ல் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க தற்போது உள்ள நிதி தளர்வு நடவடிக்கைகள் போதுமானதாக இருக்காது என்பதால் ரிசர்வ் வங்கி 2021 மார்ச் மாதத்துக்குள் முக்கிய வட்டி விகிதங்களை 0.75 சதவீதம் குறைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளது.

பிட்ச் சொல்யூஷன்ஸ்

கடந்த சில தினங்களுக்கு முன், இந்திய ரிசர்வ் வங்கி பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் முக்கிய கடனுக்கான வட்டி (ரெப்போ ரேட்டை) 0.25 சதவீதம் குறைத்து 3.75 சதவீதமாக நிர்ணயம் செய்தது. ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கையை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கினால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும். இதனால் வாடிக்கையாளர்களின் வட்டி செலவினம் குறையும். மேலும் புதிய கடன்கள் குறைந்த வட்டியில் கிடைக்கும்

இந்திய ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும்போது சில்லரை விலை பணவீக்கத்தை கணக்கில் கொண்டே முடிவு எடுக்கும். கடந்த சில மாதங்களாக சில்லரை விலை பணவீக்கம் குறைந்து வருகிறது. மேலும் வரும் மாதங்களிலும் பணவீக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரிசர்வ் வங்கி எதிர்வரும் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டங்களில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க அதிக வாய்ப்புள்ளது.