வங்கதேசத்தை நிலைகுலையச் செய்த இந்திய பந்துவீச்சாளர்கள்.. இந்தியா 86/1!

 

வங்கதேசத்தை நிலைகுலையச் செய்த இந்திய பந்துவீச்சாளர்கள்.. இந்தியா 86/1!

வங்கதேச வீரர்களை 150 ரன்களுக்குள் சுருட்டி நிலைகுலையச் செய்துள்ளனர் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள். இதனையடுத்து பேட்டிங் செய்த இந்தியா 86 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில்  இருக்கிறது.

வங்கதேச வீரர்களை 150 ரன்களுக்குள் சுருட்டி நிலைகுலையச் செய்துள்ளனர் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள். இதனையடுத்து பேட்டிங் செய்த இந்தியா 86 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில்  இருக்கிறது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடிவரும் முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து களம் கண்டது.

ind

துவக்க வீரர்களாக இறங்கிய சாத்மன் இஸ்லாம் மற்றும் இம்ருள் கயஸ் இருவரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தனர்.  இறுதியாக, இருவரும் தலா 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் கேப்டன் மொனுமில் ஹக்யூ, விக்கெட் இழக்கக்கூடாது என்ற முனைப்பில் நிதானமாக ஆடினார். மறுமுனையில் ஆடிக் கொண்டிருந்த முகமது மிதுனை, முகமது சமி 13 ரன்களுக்கு அவுட்டாக்கினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய மூத்த வீரர் முஸ்பிகுர் ரகீம், கேப்டனுடன் சேர்ந்து பொறுமையாக ஆடி அணிக்கு ரன் குவிக்க உதவினார். இந்த ஜோடியும் இந்திய பந்துவீச்சை நீண்டநேரம் சமாளிக்க இயலவில்லை. 

india

கேப்டன் மொனுமினுலை அஸ்வின் 37 ரன்களுக்கு வெளியேற்றினார். ரஹீம் 43 ரன்கள் எடுத்த போது, சமி பந்தில் போல்டு ஆகி வெளியேறினார். பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதியில் வங்கதேச அணி 150 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின் சுதாரித்து ஆடிய புஜாரா மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் இரண்டாம் நாள் முடிவில் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி 86 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து இருந்தது. அகர்வால் 37 ரன்களுடனும், புஜாரா 43 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.