வகுப்பறையில் அழுதவனுக்கு கட்டிப்பிடி வைத்தியம் ! சக தோழன் செயலால் 18 மில்லியன் பேர் கண்ணீர் !

 

வகுப்பறையில் அழுதவனுக்கு கட்டிப்பிடி வைத்தியம் ! சக தோழன் செயலால் 18 மில்லியன் பேர் கண்ணீர் !

வகுப்பறையில் ஆசிரியர் கண்டித்ததற்காக அழும் மாணவனை சக மாணவன் ஆறுதல் படுத்தும் வீடியோ இதுவரை 18 மில்லியன் இணையதளவாசிகளை கவர்ந்துள்ளது.

வகுப்பறையில் ஆசிரியர் கண்டித்ததற்காக அழும் மாணவனை சக மாணவன் ஆறுதல் படுத்தும் வீடியோ இதுவரை 18 மில்லியன் இணையதளவாசிகளை கவர்ந்துள்ளது.

வீட்டில் தம்பி அழுதால், அண்ணன் ஆறுதல் கூறுவான், பணிபுரியும் இடங்களில் பிரச்சனை என்றால் சக தொழிலாளர்கள் ஆறுதல் கூறுவர். அதுபோல வகுப்பறையில் கண்ணீர் விடும் சக தோழனை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

boy

தனது வகுப்புத் தோழனை சைகை மூலம் ஆறுதல் ஒரு சிறுவன் படுத்தும் வீடியோ ஒன்று 18 மில்லியன் சமூக வலைதளவாசிகளை கவர்ந்தது,மட்டும் இன்றி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் கல்நெஞ்சம் படைத்தோரையும் கரைய வைத்துள்ளது. யார் எப்படி போனால் என்ன, எப்படி கஷ்டப்பட்டால் என்ன என வாழ்பவருக்கு மத்தியில் ஒரு சிறுவன் தனது வகுப்புத் தோழனை ஆறுதல்படுத்தும் வீடியோ, மக்களை சிந்திக்க வைத்துள்ளது. நட்பு என்பதை எந்த எதிர்பார்ப்பையும் கொள்ளாதது என்பது இந்த சிறுவன் செய்யும் செய்கையில் நமக்கு உணர்த்தி உள்ளது. தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தும் விதமாக அந்த சிறுவன் அழுதுகொண்டே இருக்கிறான்.சகதோழன் அவனை கட்டிப்பிடித்தும் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறிக் கொண்டே இருக்கிறான். சுமார் 1 நிமிடம் ஓடும் இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள். உங்கள் கண்களும் குளமாகும் ! இந்த வீடியோவிற்க்கு பலரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை சுமார் 18 மில்லியன் பேர் பார்க்க, 4.7 லட்சம் பேர் ஷேர் செய்துள்ளனர். 1.4 லட்சம் பேர் டேக் செய்துள்ளனர். 10,000 க்கும் மேற்பட்டோர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.