லோனை நான் வாங்கிக்கிறேன், இ.எம்.ஐ, நீ கட்டிடு சிஷ்யையே – பலே காமுக ஜோசியர்!

 

லோனை நான் வாங்கிக்கிறேன், இ.எம்.ஐ, நீ கட்டிடு சிஷ்யையே – பலே காமுக ஜோசியர்!

முந்தின ஜென்மத்தில் அப்பெண்ணின் கணவர் தாம்தான் என்றும், அப்போது தன்னை சரியாக ‘கவனிக்காமல்’ விட்டதால்தான் அப்பெண்ணுக்கு இப்போது இக்கட்டான சூழல் என்றும் ஆரம்பிப்பார். கஷ்டம் எப்போது தீரும் என்று ஆறுதல் வார்த்தை தேடிவரும் அப்பாவி பெண்ணுக்கு, ஆஹா பெரிய தப்பு பண்ணிட்டோமே என்று பதைபதைப்பு வரும். பரிகாரம் கேட்பவர்களிடம், வேலையை காட்டியிருக்கிறார் வெங்கட்.

பெங்களூரு, அனுமந்தநகர் பகுதியில் வசிக்கும் வெங்கட் கிருஷ்ணாச்சார்யா ஒரு பிரபல ஜோசியர். ஜோசியர்னாலே பிரபலம்தான்ங்கிறீங்களா? அதுவும் சரிதான். நம்ம வேர்ல்ட் கப் ஜோசியர் பாலாஜி ஹாசன்மாதிரி அரசியல் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு இலாகா எல்லாம் இந்த வெங்கட் ஜோசியர் கவனிப்பதில்லை. பூராவுமே மகளிர் நலம் மட்டும்தான். இவரிடம் ஜோசியம் பார்க்க வரும் பெண்களிடம் நைச்சியமாக பேசி, முந்தின ஜென்மத்தில் அப்பெண்ணின் கணவர் தாம்தான் என்றும், அப்போது தன்னை சரியாக ‘கவனிக்காமல்’ விட்டதால்தான் அப்பெண்ணுக்கு இப்போது இக்கட்டான சூழல் என்றும் ஆரம்பிப்பார். கஷ்டம் எப்போது தீரும் என்று ஆறுதல் வார்த்தை தேடிவரும் அப்பாவி பெண்ணுக்கு, ஆஹா பெரிய தப்பு பண்ணிட்டோமே என்று பதைபதைப்பு வரும். பரிகாரம் கேட்பவர்களிடம், வேலையை காட்டியிருக்கிறார் வெங்கட்.

Astrologer Venkat Krishnacharya

ஒருவரல்ல இருவரல்ல, பல பெண்களிடம் இதுபோல் முந்தின ஜென்மம் கணவன் செண்டிமெண்ட்டை பயன்படுத்தியிருக்கிறார். சரி, பெண்கள் விஷயத்தில்தான் அப்படி இப்படி என்றால், பண விஷயத்திலும் விளையாண்டிருக்கிறார். சார்ட்டர்ட் அக்கவுண்ட்டட்டாக பணிபுரியும் இளம்பெண் ஒருவர் விரைவில் திருமணம் நடக்கவேண்டி பரிகாரம் கேட்டு வந்திருக்கிறார். வழக்கமான ஐட்டத்தைவிட இந்த தடவை ஸ்பெஷல் ஐட்டத்தையும் சேர்த்து இறக்கிவிட்டிருக்கிறார். அந்த ஆடிட்டரும் மெய்மறந்திருந்த நிலையில் இருக்கும்போது, அவர் பெயரில் 40 லட்சம் ரூபாய்க்கு லோன் வாங்கி செலவு பண்ணியிருக்கிறார். சரி, லோன் வாங்கியாச்சு, இ.எம்.ஐ. மாசாமாசம் கட்டலேன்னா பேங்க்லேர்ந்து ஆளனுப்புவான் இல்ல என்றால், அதுவும் இல்லை. எப்படின்னா, ’முந்தின ஜென்மத்துல நான் உங்கள் கணவன்’ என வசதியான வீட்டுப் பெண்களிடம் சொல்லி அவர்களை இ.எம்.ஐ. கட்டவைத்துவிடுவாரா(னா)ம். விஷயம் தெரியவந்து மகளிர் அமைப்பினர் திரண்டுவந்து மொத்து மொத்தி போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.