லைசென்ஸ் இல்லையா ரூ. 5 ஆயிரம், குடிச்சிட்டு வண்டி ஓட்டுனா ரூ. 10 ஆயிரம்!

லைசென்ஸ் இல்லையா ரூ. 5 ஆயிரம், குடிச்சிட்டு வண்டி ஓட்டுனா ரூ. 10 ஆயிரம்!

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டினால் ரூ. 5 ஆயிரமும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்  ரூ. 10 ஆயிரம் அபராதம், சிறுவர்கள் வாகனம் இயக்கினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் வாகன உரிமையும் பறிக்கப்படும். கூடுதலாக 3 ஆண்டு சிறைத்தண்டைனையும் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் மக்களவையில் மோட்டார் வாகனச் சட்ட மசோதா 2019 ஒப்புதல் பெற்றுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988 மீதான திருத்த மசோதாவாக தற்போது மோட்டார் வாகன சட்ட மசோதா 2019 ஒப்புதல் பெற்றுள்ளது. கடந்த திங்கள் கிழமை இந்த மசோதாவை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி விவாதத்துக்குக் கொண்டு வந்தார்.

 புதிய மசோதாவின் அடிப்படையில் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட ’குடித்துவிட்டு வாகன ஓட்டும்’ குற்றத்துக்கு தற்போது அபராதத் தொகை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், லைசென்ஸ் இல்லாமல் ஓட்டினால் முன்னர் 500 ரூபாய் அபராதமாக இருந்தது தற்போது 5 ஆயிரம் ரூபாயாக அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சாலையில் ஆம்புலன்ஸ்-க்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. 18 மாநிலங்களைச் சேர்ந்த போக்குவரத்து அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த மசோதா அமல்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர்கள் வாகனம் இயக்கினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் வாகன உரிமையும் பறிக்கப்படும். கூடுதலாக 3 ஆண்டு சிறைத்தண்டைனையும் விதிக்கப்படும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.