லேடியா மோடியா என்கிற பிரச்சாரத்தில் அம்மா பிரதமர் ஆவார் என்கிற ஆர்வத்தில் மக்கள் போட்ட ஓட்டு அது! நீலகிரி தொகுதி நிலவரம் !

 

லேடியா மோடியா என்கிற பிரச்சாரத்தில் அம்மா பிரதமர் ஆவார் என்கிற ஆர்வத்தில் மக்கள் போட்ட ஓட்டு அது! நீலகிரி தொகுதி நிலவரம் !

பவானி சாகர், ஊட்டி, குன்னூர், கூடலூர், அவினாசி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிகள் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் அடக்கம்.

வி.ஐ.பி தொகுதி – 5

நீலகிரி தொகுதி, காங்கிரஸ் அதிகமுறை வென்ற தொகுதி இது. பிரபு மட்டுமே நான்கு முறை வென்றிருக்கிறார். மாஸ்ட்டர் மதன் என்கிற பி.ஜே.பி-க்காரர் இரண்டு முறை இங்கிருந்து (1998,99)தேர்ந்தெடுக்கபட்டு இருக்கிறார் என்பது நீலகிரி தொகுதியின் தனிப்பெருமைகளில் ஒன்று.

nilgiri

நேரடியாக மோதும் திமுக-அதிமுக:

பவானி சாகர், ஊட்டி, குன்னூர், கூடலூர், அவினாசி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிகள் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் அடக்கம். இந்த பொதுத்தேர்தலில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் நேருக்கு நேராக மோதும் தொகுதிகளில் ஒன்று நீலகிரி.

raja

தி.மு.க-வின் ஆண்டிமுத்து ராசா என்கிற அ.ராசா  கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் பணியை துவங்கிவிட்ட நிலையில், அ.தி.மு.க இப்போதுதான் தனது வேட்பாளரை அறிவித்து இருக்கிறது. அங்கே தான் குழப்பமே. நீலகிரி தொகுதியில் வாய்ப்புக்கேட்டு 23 அ.தி.மு.க-காரர்கள் விருப்பமனு தாக்கல் செய்து இருந்தார்கள்.

அறிமுகமில்லாத வேட்பாளர்:

அதில் முக்கியமான ஆட்களாக, முன்னாள் குன்னூர் நகரட்சி தலைவர் சரவணகுமார். பா.ஜ.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்த குருமூர்த்தி, இப்போதைய சிட்டிங் எம்.பி கோபால கிருஷ்ணன், ஜெகதளா ஊராட்சி தலைவர் உஷா ஆகியோரைச் சொல்லலாம். ஆனால் இவர்கள் யாருக்குமே வாய்ப்புதராமல் நீலகிரிக்கு அறிமுகமே இல்லாத அவினாசியைச் சேர்ந்த தியாகராஜனை நிறுத்தி இருக்கிறது அ.தி.மு.க.

thiyagarajan

கடந்த முறை அ.ராசா ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருந்ததால் இந்த முறை எளிதாக நீலகிரியை வென்றுவிடலாம் என்று உற்சாகமாக இருந்த அ.தி.மு.க-வினருக்கு தியாகராஜனை வேட்பாளர் ஆக்கியது பிடிக்கவில்லை. இவர் பொள்ளாச்சி தொகுதிக்காரர்.

மோடியா, லேடியா:

இந்தத்தொகுதியை பொறுத்தவரை,திமுகவின் அ.ராசா பிரபலமானவர்.அவருக்கு இணையான ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும். கடந்த முறை மோடியா இந்த லேடியா என்று ஜெயலலிதா பேசினார்,இப்போது அவர் இல்லை. ஆனால் ராஜாவுக்கு இனையான வேட்பாளர் வேண்டும்.கடந்த முறை கோபால கிருஷ்ணன் வென்றார் என்றால் அது லேடியா மோடியா என்கிற பிரச்சாரத்தில் அம்மா பிரதமர் ஆவார் என்கிற ஆர்வத்துல் மக்கள் போட்ட ஓட்டு அது.

அதிமுக தொண்டர்கள் அதிருப்தி:

eps ops

இந்த முறை கட்சி உடைந்து கிடக்கிறது. இந்த சமயத்தில் தொகுதிக்கு அறிமுகமில்லாத ஒருவரை வேட்பாளர் ஆக்குவதா என்று அடிமட்ட அ.தி.மு.க தொண்டர்கள் குமுறிக்கொண்டு இருக்க, தி.மு.க அமைதியாக…ஆனால் தெளிவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.