லீக்கானது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் காட்சிகள்! அதிர்ச்சியில் படக்குழு!

 

லீக்கானது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் காட்சிகள்! அதிர்ச்சியில் படக்குழு!

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் படக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

சென்னை: அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் படக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

ஹாலிவுட் சூப்பர் ஹீரோஸ் படமான ‘அவெஞ்சர்ஸ் சீரிஸ்’ உலகம் முழுவதும் பிரபலமானது. அப்படத்தின் 4-ம் பாகமான அவென்சர்ஸ் எண்ட் கேம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி வெளியாக உள்ளது. உலகம் முழுக்க பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்க அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின்  ப்ரொமோஷன் பணிகள் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. 

avengers end game

இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படத்தின் மிக முக்கியமான காட்சிகள் தற்போது இணையத்தில் லீக்காகியுள்ளது.  அதில் கேப்டன் அமெரிக்கா கையில் தார்-உடைய ஹம்மர் இருப்பது போல் இருக்கின்றது. மேலும், ஹல்க் அடித்து தும்சம் செய்வது போன்ற காட்சியும் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

மேலும் இது போன்ற காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்று அவெஞ்சர்ஸ் பட ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின், தமிழ் வெர்ஷனுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதியுள்ளார். மேலும் விஜய் சேதுபதியும்,ஆண்ட்ரியாவும் அதற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளனர். குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்றுள்ள அயர்ன் மேன் கேரக்டருக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

இதையும் படிங்க: சூர்யா நம் நாட்டின் மிகச்சிறந்த நடிகர் : ஆஸ்கர் நாயகி புகழாரம்!