‘லிப் லாக்’ கிஸ் கொடுத்து கொண்டே பைக்கில் பயணம் செய்த காதல் ஜோடி: வைரல் வீடியோ!

 

‘லிப் லாக்’ கிஸ் கொடுத்து கொண்டே பைக்கில் பயணம் செய்த காதல் ஜோடி: வைரல் வீடியோ!

இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு முத்தமிட்டுக்கொண்டே போகும் இளம் ஜோடியின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

புதுடெல்லி: இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு முத்தமிட்டுக்கொண்டே போகும் இளம் ஜோடியின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

இருசக்கர வாகனங்களில் செல்லும் காதல் ஜோடிகள் சிலர் சாலை விதியை பின்பற்றாமல் அதிவேகத்தில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆபத்தை உணராமல் சிலர் செய்யும் இது போன்ற செயல்கள் அவர்களை மட்டுமில்லாமல் மற்றவர்களையும் பாதிக்கும் என்பதை உணர வேண்டும். அப்படி ஒரு ஆபத்தான பயணத்தை டெல்லி காதல் ஜோடி ஒன்று நிகழ்த்தியுள்ளது. 

bike

மேற்கு டெல்லியில் உள்ள ராஜோரி – கிர்டி நகர் சாலை சந்திப்பில் தனது காதலருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண் ஒருவர், காதலருக்கு முத்தம் கொண்டே போகிறார். ஆனால் அந்த பெண் அமர்ந்து சென்றதோ இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கில்.  வாகனத்தின் முன்பக்கம் உட்கார்ந்து அந்தப்பெண் முத்தம் கொடுக்க அவரது காதலரோ வேகமாக வண்டியை ஓட்டி செல்கிறார். பரபரப்பாகச் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இந்நிலையில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த காவல் அதிகாரி தலிவால் அதை வீடியோவாக எடுத்ததுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் சாலை விதிகளுக்கான சட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டுமென்று பதிவிட்டுள்ளார். 

 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் காதல் ஜோடிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.