லாஸ்லியா படத்தில் இணையும் பிக் பாஸ் பிரபலம்…ரசிகர்கள் உற்சாகம்!

 

லாஸ்லியா படத்தில் இணையும் பிக் பாஸ் பிரபலம்…ரசிகர்கள் உற்சாகம்!

இதில் நடிகர் ஆரி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்ருஷ்டி டாங்கேவும் நடிக்கிறார்கள். சந்திரா மீடியா விஷன் தயாரிக்கிறது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

rrtn

இவர் இயக்குநர் ஆல்பர்ட் ராஜா இயக்கும்  படத்தில் நடிக்கவுள்ளார். இதில் நடிகர் ஆரி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்ருஷ்டி டாங்கேவும் நடிக்கிறார்கள். சந்திரா மீடியா விஷன் தயாரிக்கிறது.

அதேபோல் லாஸ்லியா ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகும் பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹர்பஜனுடன் ஜோடி சேரவுள்ளார்.  இந்தப்படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கவுள்ளது  

இந்நிலையில்  ஆரி படத்தில் லாஸ்லியாவுடன் இணைந்து பிக் பாஸ் அபிராமியும் நடிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ttn

நடிகர் ஆரியின் பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பை படக்குழு வீடியோவுடன் அறிவித்துள்ளது. மேலும் விரைவில் படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.