லாஸ்லியாவுக்கு பத்து முகம் உள்ளது: சாக்ஷி அகர்வால்  ஓபன் டாக்

 

லாஸ்லியாவுக்கு பத்து முகம் உள்ளது: சாக்ஷி அகர்வால்  ஓபன் டாக்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து சாக்ஷி அகர்வால் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். 

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து சாக்ஷி அகர்வால் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஒருவர் வெளியேறினால் அவர்களை அழைத்து பேட்டி எடுப்பது ட்ரெண்டாகியுள்ளது. அப்போது அவர்களிடம் வீட்டில் நடக்கும் அனைத்து ரகசியத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர். 

அந்த வகையில் கடைசியாக வெளியேறிய சாக்ஷி சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் கவின், லாஸ்லியாவின் முக்கோண காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாக்ஷி, ‘நான் லாஸ்லியாவிடம் கவின் பற்றி கேட்ட போது நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறினார். அதே போல கவினிடம் கேட்ட போதும் நான் லாஸ்லியவை தோழியாக பார்க்கிறேன். நீ தான் மச்சா எனக்கு முக்கியம் என்று கூறினார். ஆனால், அதன் பிறகு என் முன்னாடியே அவங்க இரண்டு பேரும் நிறைய விஷயம் செய்தார்கள். 

losliya

இதனால் கோபமடைந்த நான் கவினிடம் சண்டையிட்டேன். வனிதா சொன்னதை போல் லாஸ்லியா உண்மை முகம் என்ன என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. உன்மையில் அவருக்கு 10 முகம் இருக்கிறது. எந்த முகம் உண்மையான முகம் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.