லாரியை அதிவேகமாக இயக்க மாட்டோம்; விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் – லாரி உரிமையாளர் சங்கத்தினர்

லாரியை அதிவேகமாக இயக்க மாட்டோம்; விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் – லாரி உரிமையாளர் சங்கத்தினர்

லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம் என்றும் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்றும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம் என்றும் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்றும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

சென்னை பள்ளிகரணை அருகே சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் மேலே விழுந்ததால், இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த குரோம்பேட்டை, நெமிலிச்சேரியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் கீழே விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலராக இருந்துவரும் ஜெயகோபாலின் மகள் திருமணத்திற்கு வைக்கப்பட்ட பேனர் தான் சுபஸ்ரீயின் மீது விழுந்து அவரது உயிர் பிரிய காரணமாக அமைந்தது. இதையடுத்து ஜெயகோபால் மீது பள்ளிகரணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

water lorry

இந்நிலையில் லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம் என்றும் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்றும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது, உரிய ஆவணம் வைத்திருப்போம்  என்றும் உறுதிமொழியில் குறிப்பிட்டுள்ளனர்.